சென்னை அணி வீரர் தீபக் சாகர்,மும்பை அணி வீரர் க்ருனால் பாண்டியாவிற்கு இந்திய அணியில் வாய்ப்பு!பூம்ரா,வாஷிங்டன் வெளியேற்றம்
அயர்லாந்துடன் இந்திய அணி இரண்டு 20 ஓவர் போட்டிகளில் வெற்றி பெற்று போட்டியை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.பின்னர் இங்கிலாந்து அணியுடன் 3 டி-20, 3 ஒரு நாள் மற்றும் 5 டெஸ்ட்கள் உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியில் வாஷின்டன் சுந்தர் மற்றும் பூம்ரா காயம் காரணமாக விலகி உள்ளனர்.தற்போது அவர்களுக்கு பதிலாக சென்னை அணியில் தீபக் சாகர் பூம்ராவிற்க்கு பதிலாகவும் க்ருனால் பாண்டியா வாஷின்டன் சுந்தருக்கு பதிலாகவும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இதை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
NEWS: @krunalpandya24 named as a replacement for injured Washington Sundar in India’s T20I side & @akshar2026 in the ODI side.
Deepak Chahar named as a replacement for Jasprit Bumrah in T20I side.
More details here – https://t.co/HGq0BkZslB #ENGvIND pic.twitter.com/SeKMRvqWaE
— BCCI (@BCCI) July 1, 2018
அதன் படி இந்தியா வீரர்கள் : விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், டோனி, லோகேஷ் ராகுல், மனிஷ் பாண்டே, சுரேஷ் ரெய்னா,தீபக் சாகர் , யுஸ்வேந்திர சாஹல், சித்தார்த் கவுல், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், க்ருனால் பாண்டியா , உமேஷ் யாதவ்.