சச்சின் டெண்டுல்கர் நிதியிலிருந்து பெரம்பலூர் மாவட்டத்தில் தார்சாலை அமைக்கும் பணி தொடக்கம்!
பெரம்பலூர் மாவட்டத்தில் எம்.பி நிதியில் இருந்து சாலை அமைக்க உதவிய சச்சின் டெண்டுல்கர் நிதியிலிருந்து சாலை அமைக்கபட்டு வருகின்றது.
முன்னால் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.அப்போது அவர் இருந்தபோது பெரம்பலூரில் உள்ள ஒரு கிராமத்திற்கு சாலை அமைக்க அவரது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 22 லட்சம் ரூபாய் ஒதுக்கினார்.இதையடுத்து தற்போது நிதி ஒதுக்கீடப்பட்டதையடுத்து சாலை அமைக்கப்பட்டு வருகிறது.பெரம்பலுாரில் உள்ள எளம்பலுார் ஊராட்சிக்குட்பட்ட கோல்டன் சிட்டியில், 500 மீட்டர் நீளத்திற்கு ரூ. 21.70 லட்ச ரூபாய் செலவில் தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.