ஒருபோதும் சினிமாவில் இந்த மாதிரி காட்சி வந்தால் அனுமதிக்க மாட்டோன்!பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

Default Image

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அவர் விஜய் நடிக்கும் அடுத்த படத்திற்கு சர்கார் என பெயரிடப்பட்டுள்ளது. கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி என முக்கிய கதாப்பாத்திரங்கள் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

சர்க்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை  வெளியிட்டனர்.தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில்  நடிகர் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சி போஸ்டரில் வெளிவந்தது ,இதற்க்கு கடும் கண்டனங்களை தெரிவித்த ராமதாஸ் இந்த காட்சி பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைப்பது போன்றுள்ளது .படத்திற்கு விளம்பரம் தேட இதுபோன்ற சமுக பொறுப்பற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அவர் தெரிவித்ததோடு,நடிகர்களுக்கு சமூகப் பொறுப்பு தேவை என்று கூறியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், சமூக அக்கறை  இருந்தால் சர்கார் படத்தின் புகைக் காட்சியை நடிகர் விஜய்யும், சன் பிக்சர்சும் உடனே நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதேபோல் தற்போது கடலூரில் பேசிய  பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் , சினிமாவில் புகைப்பிடிக்கும் காட்சி வந்தால் அதனை அனுமதிக்க மாட்டோம் என்று பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்