பிரதமரின் பாதுகாப்பான மகப்பேறு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழகத்துக்கு விருது!
பிரதமரின் பாதுகாப்பான மகப்பேறு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழகத்துக்கு விருது கிடைத்துள்ளது.
இன்று காலை சென்னையில் இருந்து டெல்லிக்கு எய்ம்ஸ் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்றார்.
இது குறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் கூறுகையில்,எய்ம்ஸ் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்கவுள்ளேன் .எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து ஜே.பி.நட்டாவை சந்திக்கவுள்ளேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தற்போது பிரதமரின் பாதுகாப்பான மகப்பேறு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழகத்துக்கு விருது கிடைத்துள்ளது. விருதை டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றார். 2014-16இல் பிரசவ காலங்களில் தாய்மார்களின் இறப்பு விகிதத்தை வெகுவாக குறைத்ததற்காக விருது வழங்கப்பட்டுள்ளது.