IRELAND VS INDIA:தோனி,தவான் அதிரடியாக வெளியேற்றம்!தினேஷ் கார்த்திக் உள்ளே!
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்று விளையாடுவதற்கு முன் அயர்லாந்துடன் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது.முதல் டி20 போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்று ஐயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-
இந்தியா: விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, சுரேஷ் ரெய்னா,சித்தார்த் கவுல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா,உமேஷ் ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.
அயர்லாந்து: கேரி வில்சன் (கேப்டன்), பீட்டர் சாஸ், ஜார்ஜ் டாக்ரெல், கெவின் ஓ பிரையன், பாய்ட் ராங்கின், சிமி சிங், பால் ஸ்டிர்லிங், ஸ்டூவர்ட் தாம்சன்,ஷன்னன் ,பல்ப்ரைனே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
இந்த போட்டியில் தோனி,தவான், புவனேஸ்வர் ,பூம்ரா ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.