பட்டியலின பெண் பதவியேற்க முடியாததுதான் சமூகநீதியா..? அரசை விமர்சித்த தமிழக ஆளுநர்..!

RNRavi

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவியாக கடந்த ஊராட்சி மன்ற தேர்தலில் இந்துமதி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதாலும், அந்த ஊராட்சி மன்ற தொகுதி பட்டியல் இனத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகுதி என்பதாலும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் இந்துமதி.

இதனை அடுத்து மாற்றுசமூகத்தினர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்துமதியை ஊருக்குள் வரக்கூடாது என கூறி அவர்களை ஊரை விட்டு தள்ளிவைத்ததாக தெரிகிறது.

இந்நிலையில், கடந்த 11-ஆம் தேதி இந்துமதி கணவர் பாண்டியன் ஆம்பூர் காவல் நிலையத்தில், தனது மனைவியை காணவில்லை என புகார் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி ஆளுநர் அவர்கள் விருதுநகரில் உரையாற்றியுள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், துரதிஷ்டவசமாக இங்கு சிலர் எல்லாவற்றையும் அரசியலாக பார்க்கின்ற்னர். தவறாக வழிநடாத்துகிறாரகள். குலக்கல்வி திட்டம் என்றால் தந்தை செய்யும் தொழிலை தான் மகனும் செய்ய வேண்டும் என்ற தவறான தகவலை பரப்புகிறார்கள்.

பட்டியலின பெண்ணுக்கு நீதி மறுக்கப்படும் நிலையில் சமூக நீதியை காப்பதாக பரப்புரை செய்கிறார்கள். சமூக நீதியை காப்பதாக சொல்கிறார்கள், ஆனால், பட்டியலின மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். சமூகத்தில் விஷத்தை பரப்புகிறார்கள். சமூகத்தை பிளவுபடுத்தி வைத்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் பட்டியலின பெண் ஊராட்சி தலைவராக திருமதி இந்துமதி பதவி ஏற்பது தடுக்கப்படுவதாக வெளியான செய்தியை நாளிதழில் படித்தேன். பட்டியலின பெண்ணுக்கு உரிமை மறுக்கப்படுவது தான் சமூக நீதியா என ஆளுநர் கேள்வி எழுப்பி அரசை விமர்சனம் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்