குழந்தைகளின் நியாபக சக்தியை அதிகரிக்கும் அவரைக்காய் !!
மனிதர்கள் முதலில் பயிரிட்ட தாவரங்களில் அவரைக்காய்யும் ஓன்று. அவரைக்காயில் எந்த அளவுக்கு சத்துக்கள் உள்ளதோ அதே போல் அதில் அதிக அளவில் மருத்துவ குணங்களும் உள்ளன.இதனால் தான் நோயுற்ற காலங்களில் அவரைக்காயை பதிய உணவாக நமது முன்னோர்கள் எடுத்துள்ளனர்.அவரையில் பல வகை இருந்தாலும் கொடியவரையில் தான் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது.
அவரையில் உள்ள சத்துக்கள்
ஒரு கப் அவரையில் புரத சத்து 13 கிராம் ,நீர்சத்து 122 கிராம் ,சாம்பல்சத்து 1.2 கிராம்,நார்சத்து 9.2 கிராம் மற்றும் கொழுப்புசத்து 1.2 கிராமும் உள்ளது.இதனுடன் சர்க்கரைசத்து வைட்டமின்கள் போன்றவை கிடைக்கின்றன. ஒருகப் அவரையில் 44% போலிட் என்ற வைட்டமின் சத்து உள்ளது.இந்த போலிட் சாது தான் மரபணு உற்பத்திக்கும் உடலில் செல்கள் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
மேலும் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் இந்த போலிட் சத்து முக்கிய பங்கு வகுக்கின்றது.இதனால் கருவுற்ற தாய்மார்கள் குழந்தை பிறக்கும் முன்பும் பிறந்த பின்பும் அவரைக்காயை அதிகம் சாப்பிடுவது நல்லது.குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் அவரைக்காய் சிறந்தது.
இரும்பு சத்து
உடலுக்கு போலிட் சத்து எவ்வளவு முக்கியமோ அதே போல் இரும்பு சத்தும் முக்கியம்.1 கப் அவரைக்காயில் 33% இரும்பு சத்து உள்ளது. இது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
சர்க்கரை நோயாளிகளும் அவரைக்காயை சாப்பிடுவதால் சர்க்கரையின் அளவை சீராக வைக்கும்.மேலும் இதில் உள்ள நார்சத்து மலசிக்கல் வராமல் தடுக்கும்.
அவரைக்காயை சமைத்தோ அல்லது சூப் வைத்தோ கொடுத்தால் குழந்தைகளுக்கு நியாபக சக்தி அதிகரிக்கும்.அன்றாடம் கிடைக்கும் அவரைக்காயில் அதிக சத்துக்கள் உள்ளன. அதனை சரியான முறையில் பயன்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.