காவிரி விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை!
காவிரி விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் தமிழக உறுப்பினர் பிரபாகர் உட்பட பலர் இந்த கூட்டத்தில்கலந்து கொண்டனர்.
முன்னதாக காவிரி நீர் பங்கீடு தொடர்பான கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் அனுப்பினார்.மேலும் ஜூலை மாதம் 2ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.