சுவிஸ் வங்கியில் உள்ள ரூ.7,000 கோடி இந்தியர்களின் கருப்புப்பணம் இல்லை! மத்திய அமைச்சர் பகீர் தகவல்
சுவிட்சர்லாந்திடம் பெறப்பட்டுள்ள தகவல் அனைத்தும் கறுப்புப்பணம் பற்றிய தகவல் என்று கூற முடியாது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், தகவல்களை பரிமாற இந்தியா- சுவிட்சர்லாந்து இடையே இந்தாண்டு இறுதிவரை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சுவிட்சர்லாந்திடம் பெறப்பட்டுள்ள தகவல் அனைத்தும் கறுப்புப்பணம் பற்றிய தகவல் என்று கூற முடியாது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் டெபாசிட் செய்த பணத்தின் அளவு 2016ஆம் ஆண்டை விட 2017ஆம் ஆண்டில் 50% அதிகரித்துள்ளது.ரூ.7,000 கோடிக்கும் மேல் வங்கியில் பணம் இருக்கிறது என்று சுவிஸ் வங்கி அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது .