இனி இந்த போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது.! உங்கள் போன் இதில் உள்ளதா.?

WhatsApp

நமது அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்ட வாட்ஸ்அப், அவ்வப்போது பயனர்களை குதூகலப்படுத்தும் விதமாகவும், அவர்களுக்கு உதவும் வகையிலும் பல புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. ஆனால், இப்போது பயனர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி, வாட்ஸ்அப் செயலியானது பழைய மென்பொருட்கள் (ஓஎஸ்) கொண்ட போன்களில் செயல்படுவதை நிறுத்தப் போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏன் இந்த முடிவு.?

நமது மொபைலில் இருக்கும் மென்பொருட்கள் மற்றும் அதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை வைத்தும் இந்த முடிவை எடுத்துள்ளதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. ஏனென்றால் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் புதிய ஸ்மார்ட்போன்களை சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றன. இதில் பழைய மென்பொருட்கள் மற்றம் செய்யப்பட்டு புதிய மென்பொருட்கள் அறிமுகமாகின்றன.

இந்த மாற்றங்களினால் பலரும் புதிய ஸ்மார்ட்போன்களை வாங்குகின்றனர். இதனால் பழைய சாதனங்களை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கையானது குறைகிறது. எனவே, பயனர்களின் எண்ணிக்கை மற்றும் அதிக அளவு உபயோகத்தில் இருக்கும் மென்பொருள் ஆகியவற்றை மதிப்பாய்வு செய்து வாட்ஸ்அப் ஆனது எந்த மென்பொருளில் இயங்க வேண்டும் என்பது முடிவு செய்யப்பட்டுள்ளது.

செயலிழக்கும் வாட்ஸ்அப்:

இந்த நாள் வரை வாட்ஸ்அப் ஆனது ஆண்ட்ராய்டு ஓஎஸ் வெர்சன் 4.1 லிருந்து, தற்போது வரை உள்ள வெர்ஷன் ஆண்ட்ராய்டு 13 வரை உள்ள சாதனங்களில் செயல்படுகிறது. அதோடு, ஆப்பிள் சாதனங்களில் ஐஓஎஸ் 12 மற்றும் ஐஓஎஸ் 17 வரையிலான புதிய ஆப்பிள் ஐபோன்களில் செயல்படுகிறது. KaiOS 2.5.0, ஜியோபோன், ஜியோபோன் 2 போன்ற போன்களிலும் வாட்ஸ்அப் ஆனது செயல்பாட்டில் உள்ளது.

ஆனால், இதனையடுத்து ஐஓஎஸ் மற்றும் KaiOS 2.5.0 களை தவிர ஆண்ட்ராய்டு வெர்சன் 4.1 கொண்ட சாதனங்களில் வாட்ஸ்அப் செயல்படாது என்றும் இது அக்டோபர் 24ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்-24ம் தேதி முதல் ஆண்ட்ராய்டு 5.0 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்ட்ராய்டு வெர்சன் கொண்ட சாதனங்களில் மட்டுமே வாட்ஸ்அப் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நினைவூட்டல் அறிவிப்பு:

வாட்ஸ்அப் உங்கள் ஸ்மார்ட் போனில் செயல்படுவதை நிறுத்துவதற்கு முன்னதாக வாட்ஸ்அப்பில் உங்களுக்கு ஒரு அறிவிப்பை அனுப்பப்படும். அந்த அறிவிப்பு உங்களுக்கு வாட்ஸ்அப் வேலை செய்யாது, உங்களது சாதனத்தை புதுப்பியுங்கள் என்ற நினைவூட்டும். அந்த அறிவிப்பிற்கு பிறகும், அந்த ஸ்மார்ட்போனை நீங்கள் மாற்றாமல் வைத்திருந்தால், அதில் வாட்ஸ்அப் ஆனது வேலை செய்யாது.

அதாவது, வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் மற்றும் கால் செய்வது, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்வது போன்ற எந்த அம்சங்களையும் பயன்படுத்த முடியாது. எனவே ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பயனர்கள் உங்கள் மொபைலில் ஆன்ட்ராய்டு வெர்சன் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு, ஆன்ட்ராய்டு 5.0-க்கு குறைவாக இருந்தால் உடனே மாற்றி விடுவது நல்லது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்