சென்னையில் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்!
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் காவலர்கள் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் காவலர்கள் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் ஒரே நாளில் சுமார் 20,000 போலீசார் ரத்ததானம் செய்கின்றனர். துணை முதலமைச்சர், அமைச்சர்கள் ஜெயக்குமார்,விஜயபாஸ்கர், வேலுமணி, செங்கோட்டையன், உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.