தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வைர மூக்குத்தி காணிக்கை!
தெலுங்கானாவின் முதல்வராக இருந்து வருபவர் சந்திர சேகரராவ்.தெலுங்கானா தனி மாநிலமாக உருவாக வேண்டி இவர் பல கோயில்களுக்கு காணிக்கை வழங்குவதாக தெரிவித்திருந்தார்.
இதன்படி தெலுங்கானாவும் தனி மாநிலமாக உருவாகி தற்போது அந்த மாநிலத்திற்கு முதல்வராக சந்திர சேகரராவ் இருந்து வருகிறார்.
தற்போது காணிக்கையின் ஒரு பகுதியகா ஆந்திராவில் உள்ள விஜயவாடாவில் உள்ள கனக துர்க்கையம்மனுக்கு தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வைர மூக்குத்தியை காணிக்கையாக வழங்கினார். இதை அவரே தலையில் சுமந்து சென்று காணிக்கையாக வழங்கியுள்ளார்.