ஜெயலலிதா மரணம்:உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி ஆஜராகி விளக்கம்!
உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அரசு உயர் அதிகாரிகள், ஜெயலலிதாவின் வீட்டில் பணியாற்றியவர்கள், அப்போலோ மருத்துவமனை மருத்துவர், செவிலியர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது.ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, உளவுத்துறை ஐஜிஆக இருந்த சத்தியமூர்த்திக்கும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
இன்று அதன்படி அவர் சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் நீதிபதி ஆறுமுகசாமி முன் ஆஜராகினார். அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைபெற்ற காலத்தில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் நீதிபதியிடம் விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது.