மொத்தக் கடனையும் திருப்பிச் செலுத்துவதற்காகத் தன்னுடைய சொத்துக்களை விற்க அனுமதி வேண்டும்!விஜய் மல்லையா
விஜய் மல்லையா ,கடனை அடைப்பதற்காகத் தன்னுடைய சொத்துக்களை விற்க அமலாக்கத்துறையோ சிபிஐயோ எதிர்ப்புத் தெரிவித்தால் அது தனக்கு எதிரான சதியின் வெளிப்பாடாகவே இருக்கும் என தெரிவித்துள்ளார்.
லண்டனில் யுனைடெட் பிரிவரீஸ், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களின் அதிபர் விஜய் மல்லையா உள்ளார். தனது நிறுவனங்களுக்காக வங்கிகளில் கடன்பெற்ற அவர் வட்டியும் முதலுமாக 13ஆயிரத்துத் தொள்ளாயிரம் கோடி ரூபாய் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது. அவரை இந்தியாவுக்கு அழைத்து வர சிபிஐ முயன்றுவருகிறது.
இந்நிலையில், மொத்தக் கடனையும் திருப்பிச் செலுத்துவதற்காகத் தன்னுடைய சொத்துக்களை விற்க அனுமதி கோரிக் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக விஜய் மல்லையா தெரிவித்தார். இந்தச் சொத்துக்களை விற்பதை அமலாக்கத் துறையோ, சிபிஐயோ எதிர்த்தால் தனக்கு எதிரான சதியின் வெளிப்பாடாகவே அது இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.