வாகைக்குளம் சுங்க சாவடியில் 50 சதவீத கட்டண உத்தரவு நிறுத்தி வைப்பு.! உயர்நீதிமன்றம் கடும் விமர்சனம்.!

Madurai High court

தூத்துக்குடி – திருநெல்வி நெடுஞ்சாலையில் வாகைக்குளம் பகுதியில் சுங்க சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சுங்க சாவடி கட்டுப்பாட்டில் இருக்கும் NH38 தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமாக இருக்கிறது. பராமரிப்பு பணிகள் முழுதாக முடியாமல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும் நெல்லையை சேர்ந்த ஒருவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் சுந்தர், பாரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்த போது, சாலை பராமரிப்பு பணிகளை முழுதாக முடிக்காமல் எதற்காக சுங்க சாவடியை திறந்தீர்கள் என்றும், இது குறித்து 2 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும், அது வரையில் 500 சதவீத சுங்க கட்டணம் தான் வசூலிக்க வேண்டும் என கூறப்பட்டது.

ஆனால், சுங்கச்சாவடியில் ஒருநாள் கூட 50 சதவீத கட்டணம் வசூலிக்கப்பட்டவில்லை என்று பொதுநல வழக்கு தொடர்ந்த்தவர், மீண்டும் மதுரை உயர்நீதிமன்றத்தை நாடினார். மேலும், சுங்கசாவடி திட்ட இயக்குனர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர் அனுமதி கோரினார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நெடுஞ்சாலைத்துறை மற்றும் சுங்கச்சாவடி திட்ட இயக்குனரை கடுமையாக சாடினர். நீதிமன்ற உத்தரவை ஒருநாளாவது அமல்படுத்தினீர்களா.? சுங்கச்சாவடி திட்ட இயக்குனர் அளித்த விளக்கத்தில் திருப்தி இல்லை. இது தொடர்பாக நெடுஞ்சாலை துறை விளக்கம் அளிக்க வேண்டும். அதுவரையில் 50 சதவீத சுங்க கட்டணம் என்பது நிறுத்தி வைக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்