Ireland vs India:இந்திய அணி அதிரடி ஆட்டம்!6 ஓவர்களில் 60 ரன்கள்!
அயர்லாந்துடன் இந்திய அணி இரண்டு 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது.
இதன்படி இந்தியா-அயர்லாந்து மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி டப்ளின் நகரில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்று ஐயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-
இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, டோனி,மனிஷ் பாண்டே, சுரேஷ் ரெய்னா, பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார் ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.
அயர்லாந்து: கேரி வில்சன் (கேப்டன்), பால்பிர்னி, பீட்டர் சாஸ், ஜார்ஜ் டாக்ரெல், கெவின் ஓ பிரையன், ஸ்டூவர்ட் பாய்ன்டிர், பாய்ட் ராங்கின், சிமி சிங், பால் ஸ்டிர்லிங், ஸ்டூவர்ட் தாம்சன்,ஜாஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் அதிரடியாக விளையாடி வருகின்றனர்.
இந்த தொடக்க ஜோடி 6 ஓவர்களில் 60 ரன்களை அடித்துள்ளது.இதில் தவான் 30 ரன்களும்,ரோகித் 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.