இந்தியா நீரவ் மோடியின் இருப்பிடம் கண்டறிய உதவுமாறு ஐரோப்பிய நாடுகளுக்கு கடிதம்!
இந்திய வெளியுறவுத்துறை நீரவ் மோடியின் இருப்பிடம் கண்டறிய உதவுமாறு, ஐரோப்பிய நாடுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
12 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த வைர வியாபாரி நீரவ் மோடி, வெளிநாடு தப்பிச் சென்று விட்டார். அவர் எந்த நாட்டில் உள்ளார் என்பது தற்போது வரை உறுதியாக தெரியவில்லை.
ஐரோப்பிய நாடுகளில் நீரவ் மோடி உலவுவதாக அவ்வப்போது கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதைத் தொடர்ந்து வெளியுறவுத்துறை நீரவ் மோடியின் இருப்பிடத்தை கண்டறிய உதவுமாறு, பெல்ஜியம், பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.