மாம்பழத்தை சாப்பிட்ட குற்றத்திற்காக அடித்து கொல்லப்பட்ட சிறு குழந்தை..!

Default Image

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில், கீழே கிடந்த மாம்பழத்தை எடுத்துச் சாப்பிட்டதற்காக, தலித் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட கோரச் சம்பவம் நடந்துள்ளது.

பதேபூர் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்தவர் ராணி தேவி. தலித் வகுப்பைச் சேர்ந்த இவர், கால்நடைகள் மேய்க்கும் தொழிலாளி ஆவார். அந்த வகையில், மாந்தோப்பு ஒன்றுக்குள் கால்நடைகளை மேய்த்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது, அங்குள்ள மரத்திலிருந்து மாம்பழம் ஒன்று கீழே விழுந்து கிடந்துள்ளது. அதை ராணி தேவி எடுத்துச் சாப்பிட்டுள்ளார்.
கெடுவாய்ப்பாக அதைப் பார்த்துவிட்ட தோப்பின் உரிமையாளர், ராணி தேவியை ஒரு பெண் என்றும் பாராமல், சரமாரியாக மிகக் கொடூரமான முறையில் தாக்கியுள்ளார்.

இதில் ராணி தேவி படுகாயமடைந்துள்ளார். எனினும் தட்டுத்தடுமாறி வீட்டுக்கு வந்த ராணி தேவி, மயங்கி கீழே விழவே, அவரை உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். அங்கிருந்த மருத்துவர்கள் கான்பூருக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். அதன்படி கான்பூருக்கு சென்று கொண்டிருந்தபோது, வழியிலேயே ராணி தேவி இறந்துள்ளார்.
அழுகி அதுவாகவே உதிர்ந்த மாம்பழத்தைச் சாப்பிட்டதற்காக, தலித் பெண் அடித்துக் கொல்லப்பட்டது, பதேபூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணி தேவியை அடித்துக் கொன்றவரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த நிலையில், தோப்பின் உரிமையாளர் தற்போது தலைமறைவாகி இருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்