மீனவ சங்க நிர்வாகிகள் இலங்கை அரசால் விடுவிக்கப்பட்டுள்ள 10 விசைப்படகுகளை மீட்டு வர நடவடிக்கை!
மீனவ சங்க நிர்வாகிகள் இலங்கை அரசால் விடுவிக்கப்பட்டுள்ள 10 விசைப்படகுகளை மீட்டு வருவதற்காக, மீன்வளத்துறை உதவி இயக்குநர் தலைமையில் இலங்கைக்குப் பயணமாகினர்.
கடந்த மூன்று ஆண்டுகளில், மீன்பிடிக்கச் சென்ற, 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். அப்போது கைதான மீனவர்களை விடுவித்த இலங்கை அரசாங்கம், விசைப்படகுகளை விடுவிக்க மறுத்துவிட்டது. இந்த நிலையில், நல்லெண்ண அடிப்படையில், 6 மாதங்களுக்கு முன்பு, 42 படகுகளை விடுவித்தது. இதில்,32 படகுகளை மட்டுமே மீட்க முடிந்தது. எஞ்சிய 10 படகுகளை மீட்க இயலவில்லை..
இந்த படகளுக்குப் பதிலாக, வேறு 10 படகுகளை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. இதன் அடிப்படையில், மீன்வளத்துறை உதவி இயக்குநர் கோபிநாத் தலைமையில், மீனவ சங்க பிரதிநிதிகள், விமானம் மூலம், கொழும்புவிற்கு பயணமாகினர்.