எனக்கு புதுச்சேரி மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய பொறுப்பு உள்ளது!புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி

Default Image

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி  அரசு பதவியில் உள்ள தமக்கு அதிக பொறுப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக புதுச்சேரியில் கிரண்பேடி உத்தரவுப்படி  117 கோடி ரூபாய் மின்கட்டணம் செலுத்தாதவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக இரண்டரைக் கோடி ரூபாய் மின்கட்டண பாக்கி ஒரே நாளில் வசூலானது. இதையடுத்து தலைமை பொறியாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று கிரண்பேடி ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, சராசரி மனிதர்களுக்கு நீதியைப் பெற்றுத் தருதல், வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு போன்றவற்றை பாதுகாத்தல் உள்ளிட்ட பொறுப்புகள் தமக்கு இருப்பதாக தெரிவித்தார். ஆய்வு செய்ய தமக்கு அதிகாரம் இல்லை என்று கூறுவோர், இத்தகைய பொறுப்புகளை வந்து பகிர்ந்து கொள்ளலாம் எனவும் கிரண்பேடி தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்