சென்னையில் காதலன் திருமணத்திற்கு மறுத்ததாக பெண் தற்கொலை முயற்சி!
திருமணம் செய்ய காதலன் மறுப்பதாக கூறி சென்னை மாதவரத்தில் கல்லூரி மாணவி 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
மாதவரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரும்,பிகாம் முதலாம் ஆண்டு பயிலும் அந்த மாணவியும், 2 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் மாணவியின் வீட்டாருக்கு தெரியவந்ததால், திருமணம் செய்து கொள்ளலாம் என்று மணிகண்டனை அந்த பெண் வலியுறுத்தியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த மணிகண்டன் காதலியை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. மனமுடைந்த அந்த மாணவி வீட்டில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்தார்.
மகளை காப்பாற்ற முயன்ற தந்தையும் மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். பாடுகாயமடைந்த இருவரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் மணிகண்டனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.