மகாராஷ்ட்ரா அருகே விபத்துக்குள்ளான போர் விமானம்!
மகாராஷ்ட்ர மாநிலம் நாசிக் அருகே ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வந்த சுகோய் 30 எம்கேஐஎஸ் (Sukhoi 30MKIs) ரக போர் விமானம்விபத்துக்குள்ளானது.
பத்திரமாக இதில் இருந்த விமானிகள் இருவரும் மீட்கப்பட்டனர். தயாரிப்பு நிலையில் இருந்த இந்த விமானம், இன்னும் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்படாத நிலையில் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.