இந்தியா – அயர்லாந்து : முதல் T20 போட்டி : இன்று ஆரம்பம்..!
இந்திய அணி , இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு இங்கிலாந்து அணியுடன் 3 இருபது ஓவர் போட்டி, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. வரும் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கும் இப்போட்டிகள் செப்டம்பர் மாதம் வரை இங்கிலாந்தில் நடைபெற இருக்கின்றன.
இதனிடையே கிரிக்கெட்டில் கத்துக்குட்டியான அயர்லாந்து அணியுடன், இந்திய அணி 2 இருபது ஓவர் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இன்று அயர்லாந்து அணியுடன் இரண்டு டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதில் முதல் போட்டி டப்ளினில் உள்ள தி வில்லேஜ் மைதானத்தில் வைத்து தொடங்குகிறது. இந்திய நேரப்படி இந்தப் போட்டியின் நேரலையை மதியம் 3 மணி முதல் காணலாம்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, தோனி, ராகுல் உள்ளிட்ட பலம்வாய்ந்த வீரர்களும், இளம் பந்துவீச்சாளர்களும் கலந்துகொள்ளும் இந்தப் போட்டியில் விறுவிறுப்பில் பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கலாம்.