அன்பு நண்பர் அஜித்துடன் மீண்டும் கரம் கோர்ப்பதில் மகிழ்ச்சி !தல அஜித் குறித்து விவேக் குறித்து
விவேக் அஜித்துடன் மீண்டும் கரம் கோர்ப்பதில் மகிழ்ச்சி’ எனத் தெரிவித்துள்ளார்.
‘விசுவாசம்’ அஜித் நடிப்பில் சிவா இயக்கிவரும் படம் ஆகும். ஹைதராபாத்தில் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், விரைவில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. மதுரையை பின்னணியாகக் கொண்ட கதை என்றாலும், ஹைதராபாத் மற்றும் ராஜமுந்திரியில் செட் போட்டு படமாக்க இருக்கிறார்கள்.
நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார். ‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
இந்நிலையில்,விவேக்கும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். “அன்பு நண்பர் அஜித்துடன் மீண்டும் கரம் கோர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்திய ரசிகப் பெருமக்களுக்கு என் நன்றிகள். எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வேன்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் விவேக்.