உச்சநீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு!பணியாளர் தற்கொலைக்கு உயர் அதிகாரி பொறுப்பில்லை!
உச்சநீதிமன்றம்,பணிச்சுமையால் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதற்கு அவருடைய மேலதிகாரி பொறுப்பில்லை என தீர்ப்பளித்துள்ளது.
மகாராஷ்டிரக் கல்வித்துறையில் துணை இயக்குநராகப் அவுரங்காபாத்தில் பணியாற்றி வந்த கிசோர் பராசர் என்பவர் 2017ஆகஸ்டு மாதத்தில் தற்கொலை செய்துகொண்டார். இதற்கு மேலதிகாரியின் தூண்டுதலே காரணம் எனக் கூறி அவர் மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
தனது மேலதிகாரி கணவருக்கு அதிக வேலைகளைக் கொடுத்ததாகவும் விடுமுறை நாட்களிலும் வேலை செய்யச் சொன்னதாகவும் ஒரு மாத ஊதியத்தை நிறுத்தி வைத்ததாகவும், ஊதிய உயர்வை நிறுத்திவிடுவதாக மிரட்டியதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். இதையடுத்து அவுரங்காபாத் காவல்துறையினர் மேலதிகாரி மீது வழக்குப் பதிவு செய்தனர்.
உயர்நீதிமன்றத்தில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மேலதிகாரி தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் அவர் முறையிட்டார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா, லலித் ஆகியோர், இந்த வழக்கில் தற்கொலைக்குத் தூண்டுதல் இருந்ததாகக் கருதுவதற்குப் போதுமான சான்றுகள் இல்லை எனக் கூறி மேலதிகாரி மீதான வழக்கை ரத்து செய்தனர்.
இதையடுத்து நீதிபதிகள் எந்த மேலதிகாரியும் பணியாளரைத் துன்புறுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் பணியை அளிப்பதில்லை என்றும் தெரிவித்தனர்.