தூத்துக்குடி வன்முறையில் கைது செய்யப்பட்ட 65 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய முடியாது!

Default Image

ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டதாக 65 பேரின் ஜாமீனை தள்ளுபடி செய்யக்கோரும் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே 22 ஆம் தேதி நடந்த போராட்டம் வன்முறையானதை தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்13 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தப் போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 65 பேரையும் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற முதன்மை நீதிபதி சொந்த ஜாமீனில் விடுதலை செய்திருந்தார். அரசு தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் 65 பேருக்கும் ஜாமீன் அளிக்கப்பட்டதால் அதனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்  மேல்முறையீடு செய்யப்பட்டது.

இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டதாக 65 பேரின் ஜாமீனை தள்ளுபடி செய்யக்கோரும் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும்  தூத்துக்குடி நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை எதிர்த்த அரசின் மேல்முறையீட்டு மனுவும்  தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.65 பேர் மீதான குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரத்தை காவல்துறை சமர்பிக்க தவறியதால் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் வழக்கு தொடரப்பட்டுள்ள 65 பேரின் சார்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்கறிஞர் சாஜி வாதிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்