நாமக்கலில் ஆளுநருக்கு எதிராக போராடியதற்காக கைது செய்யப்பட்ட திமுகவினருக்கு ஜாமீன்!

Default Image

நாமக்கலில் ஆளுநருக்கு எதிராக போராடியதற்காக கைது செய்யப்பட்ட திமுகவினருக்கு ஜாமீன் வழங்கியது  மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்.

கடந்த ஜூன் 22 ஆம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாமக்கல் அண்ணா சிலை அருகே கவர்னருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தப்பட்டது. அதில் ஆளுநர் சென்ற கார் மீது கருப்புக்கொடி, பலூன்களை வீசியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரை அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட 241 பேரில் 192 பேர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது நாமக்கலில் ஆளுநருக்கு எதிராக போராடியதற்காக கைதுசெய்யப்பட்ட திமுகவினருக்கு ஜாமீன் வழங்கி  மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்