மீனவர்கள் நலன் காக்க ரூ.1 கோடி சூழல் நிதி… தமிழக அரசு அறிவிப்பு!

TNGovt

காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு சுழல் நிதியில் இருந்து ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மீனவர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்பாராமல் கடலில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலை மற்றும் இயற்கை சீற்றங்களின் காரணமாக விபத்தில் சிக்கி காணாமல் போன மீனவர்களின் குடும்பங்கள் எந்த வருமானமும் இன்றி வறுமைக் கோட்டிற்கு கீழ் செல்லும் நிலையில் உள்ளதால், மீனவர் நலனை காக்க இவ்வரசு உறுதி பூண்டுள்ளது.

மீனவர் நலனில் அக்கறை கொண்டுள்ள திமுக அரசு, அம் மீனவர்களின் துயர் துடைக்க சுழல் நிதியினை உருவாக்கி அதிலிருந்து காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2. லட்சம் வழங்கும் பட்சத்தில் வாழ்வாதாரம், பொருளாதார ரீதியாக மேம்படுத்திக் கொள்ள பேருதவியாக அமையும்.

இதனால், 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரை நிலுவையாக உள்ள 25 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் நிவாரணம் வழங்கிட ரூ.50 லட்சமும், இனிவரும் காலங்களில் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு விரைவில் நிவாரணம்  வழங்குவதற்காக ரூ.50 லட்சமும் என மொத்தம் ரூ.1 கோடி சூழல் நிதி உருவாக்கப்படும்.

அதன்படி, 2016 முதல் 2021 வரை கடலில் காணாமல் போன 25 மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் இனி வரும் காலங்களில் கடலில் காணாமல் போன, இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் மீனவர்கள் குடும்பங்களுக்கு சூழல் நிதியில் இருந்து நிவாரண நிதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல குடும்பங்கள் வறுமையில் வாடி வரும் நிலையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்