தீவிரவாதம் தமிழகத்தில் இல்லை! அமைச்சர் ஜெயக்குமார்

Default Image

அமைச்சர் ஜெயக்குமார் தமிழகத்தில் தீவிரவாதம் இல்லை என்று  தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் சட்டமன்றகுழு தலைவர் ராமசாமி   காவல்துறை மானியக் கோரிக்கை மீது பத்து நிமிடத்திற்குள் பேசுமாறு சபாநாயகர் கூறினார். காங்கிரஸ் சார்பாக தான் மட்டுமே பேசுவதாகவும், பேசநேரம் தரவில்லை என்றால் ராஜினமா செய்ய தயார் என்றும் அவர் கடுமையாக தெரிவித்தார்.

சபாநாயகர் அவரை  நேரம் கருதி விரைந்து பேசுங்கள் என சமாதானப்படுத்தினார். அப்போது பேசிய ராமசாமி, தமிழகத்தில் போதை பொருட்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது என்றும் பணத்தை வீட்டிலோ வங்கியிலோ வைக்க முடியாத அளவுக்கு திருட்டு அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் தீவிரவாத பயிற்சிக் கூடங்கள் உள்ளன என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடர்ந்து பேசி வருவது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அமைச்சர் ஜெயக்குமார்  இதற்கு பதிலளித்த அவர்  தமிழ்நாட்டில் தீவிரவாதம் இல்லை என்றும், தீவிரவாதம் வேரறுக்கப்பட்டு விட்டதாகவும் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்