சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கோரி வழக்கு இன்று விசாரணை…!
புதுடில்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிப்பது குறித்து சுப்ரீம் கோர்ட் இன்று (13ம் தேதி) முக்கிய முடிவு எடுக்கிறது டெல்லி உச்சநீதிமன்றம்.
கேரளாவிலுள்ள சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில், பத்து வயதுக்கு உட்பட்ட சிறுமியரும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மட்டுமே கோயிலுக்குள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா இளம் வழக்கறிஞர்கள் சங்கம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ‘சபரிமலைக்கு செல்ல, பெண்களுக்கு அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்’ என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பான முடிவை சுப்ரீம் கோர்ட் கடந்த பிப்., மாதம் நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிப்பதா, வேண்டாமா என்ற வழக்கை சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதா, வேண்டாமா என்ற முக்கிய முடிவை இன்று சுப்ரீம் கோர்ட் வெளியிட உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.