கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை தமிழகத்தில் கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது!தமிழக அரசு
தமிழக அரசு ,தமிழகத்தில் கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளதாகவும், வழிப்பறி திருட்டு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டை தமிழகத்தில் ஒப்பிட்டு பார்க்கும் போது 2017 ஆம் ஆண்டு வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு ஆயிரத்து 680 ஆக இருந்த வழிப்பறி குற்றங்களின் என்ணிக்கை 2017 ஆம் ஆண்டு ஆயிரத்து 850 ஆக அதிகரித்துள்ளது. பண்ணிரெண்டாயிரத்து 128 ஆக இருந்த திருட்டு சம்பவங்களின் என்ணிக்கை 2017 ஆம் ஆண்டு 15 ஆயிரத்து 422 ஆக அதிகரித்துள்ளது.
அதே வேளையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் என்ணிக்கை கணிசமான அளவுக்கு குறைந்துள்ளது. கடந்த 2016 ஆம்ஆண்டு 27 ஆக இருந்த பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை என்ணிக்கை 2017 ஆம் ஆண்டு வெறும் 9 ஆக குறைந்துள்ளது. இதே போல் வரதட்சணை, பாலியல் பலாத்காரம், மானபங்கம், பெண்கடத்தல் போன்ற சம்பவங்களின் என்ணிக்கையும் கணிசமான அளவுக்கு குறைந்துள்ளதாக கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் 2016 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது விபத்துக்களின் எண்ணிக்கையும் ,சாலை விபத்துக்களால் ஏற்பட்ட மரண நிகழ்வுகளும் 2017 ஆம் ஆண்டு குறைந்துள்ளதாக கொள்கை விளக்கக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டில் நிகழ்ந்த 71 ஆயிரத்து 431 சாலை விபத்துக்களில் 17 ஆயிரத்து 218 பேர் உயிரிழந்துள்ளனர். அதே வேளையில் 2017-ல் நடந்த 65 ஆயிரத்து 562 சாலை விபத்துக்களில் 16 ஆயிரத்து 157 ஆக பலியானோர் எண்ணிக்கை குறைந்துள்ளது