தமிழகத்தை சேர்ந்த 4 பேர் செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக ஆந்திர போலீசாரால் கைது!

Default Image

தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 6 நபர்களை,  செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக,ஆந்திர காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

33 லட்ச ரூபாய் மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சித்தூர் மாவட்டம் எர்ரவாரிபாளையத்தில், காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காரில் செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.

இதேபோன்று,வாகன தணிக்கை கடப்பா மாவட்டம் வாக்கட்டி கோணா என்ற இடத்தில் நடைபெற்றது. அப்போது, இரண்டு வாகனங்களில் செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த சென்னையைச் சேர்ந்த சீனிவாசன், கடப்பாவைச் 2 லட்சுமையா மற்றும் வினோத் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதில், சென்னையைச் சேர்ந்த சீனிவாசன் மென்பொறியாளராக பணியாற்றி வந்த நிலையில், செம்மரக் கடத்தலில் அதிக பணம் கிடைப்பதை அறிந்து, கடந்த 8 ஆண்டுகளாக செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு வருவதாக போலீசார் கூறினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
Bumrah - Bhuvneshwar kumar
Vidaamuyarchi Trailer
Israel Hamas Ceasefire
SpaDex Docking - PM Modi
Train movie team wishes Vijay Sethupathi
gold price