நான்கு வருடங்களுக்கு பிறகு மீண்டும் அஜீத்துடன் கைகோர்க்கும் பிரபல நடிகர்..!

Default Image

இயக்குனர் சிவா மற்றும் அஜித் கைகோர்த்து நடித்த படங்கள் பட்டியலில் 4-வது முறையாக நடித்து வரும் படம் ‘விசுவாசம்’. ஐதராபாத்தில் தொடங்கிய இதன் முதல் கட்டப்படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது . அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் 27ம் தேதி தொடங்க இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த படப்பிடிப்பில் அஜித் இளமை தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் அஜித்துடன் நடிகர் விவேக் இணைந்து நடிக்க இருக்கிறார். ஏற்கனவே அஜித்துடன் நடிகர் விவேக் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்திருக்கிறார். நான்கு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இப்படம் மூலம் இணைந்திருக்கிறார்கள்.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்