விரைவில் காவல்துறை சீர்திருத்தத்திற்காக போலீஸ் ஆணையம் அமைக்கப்படும்!முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,காவல்துறை சீர்திருத்தத்திற்காக விரைவில் போலீஸ் ஆணையம் மூத்த ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்விக்கு பதிலளித்த அவர், மூத்த ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் விரைவில் போலீஸ் ஆணையம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். அதே போன்று காவல்துறையில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் குறித்து ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், 2011 முதல் 2017 வரை காவலர், உதவி ஆய்வாளர் உள்பட மொத்தம் 22 ஆயிரத்து 188 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,காலிப்பணியிடங்கள் இல்லாத அளவிற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.