முதல் முறையாக சித்தார்த்துடன் கைகோர்க்கும் கேத்ரீன் ..!
நடிகர் சித்தார்த் சமீபத்தில் நடித்த அவள் படம் திகில் படமாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதே திகில் பாணியில் அடுத்த படமும் தயாராக உள்ளது. இதற்கான பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் நடிகை கேத்ரின் தெரசா இணைந்துள்ளார். நடிகர் சித்தார்த் மற்றும் கேத்ரின் தெரசா இருவரும் தெலுங்கு ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவகள் என்பதால் தெலுங்கிலும் இப்படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் சாய் சேகர் இயக்குகிறார். கபீர் சிங் , காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
ஜூலை 13 – ம் தேதி தொடங்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் நடிகை கேத்ரின் தெரசா நடிக்கும் காட்சிகள் முதலில் படமாக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை சென்னை, புதுச்சேரியில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.