காவிரி விவகாரம்.! சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்ட கன்னட நடிகர் சிவராஜ்குமார்.!
நடிகர் சித்தார்த் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் சித்தார்த். சு.அருண்குமார் இயக்கிய இந்த படத்தை சித்தார்த் தான் தயாரித்தும் இருந்தார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக நேற்று நடிகர் சித்தார்த் பெங்களூரு சென்று இருந்தார். அப்போது ஓர் அரங்கில் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிவந்தார்.
அப்போது, அந்த அரங்கினுள் நுழைந்த கன்னட அமைப்பை சேர்ந்த சிலர், தற்போது காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் இரு மாநிலங்களுக்கு இடையே பேசப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில் சினிமா நிகழ்ச்சி தேவையில்லை என்று தடுத்து நிறுத்தினர். அப்போது பத்திரிகையாளர்களுக்கு நன்றி கூறி சித்தார்த் அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினார்.
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக , தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூறிய உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடகா மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் நடந்த இந்த போராட்டத்தில் நடிகர் சிவராஜ்குமார் கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், காவிரி விவகாரத்தை இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை மூலமே சரி செய்ய வேண்டும். அதனை விடுத்து தனி நபரை தொந்தரவு செய்ய கூடாது. நடிகர் சித்தார்த் நேற்று உங்களுக்கு நடத்தவற்றிற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கன்னட சினிமா யார் வந்தாலும் அவர்களை வரவேற்க செய்யும் என்றும் அந்த நிகழ்வில் நடிகர் சிவராஜ்குமார் பேசினார்.