பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் அதிகாரிகள் கைது!இந்திய வங்கிகள் சங்கம் கடும் கண்டனம்
பேங்க் ஆப் மகாராஷ்டிரா தலைமை செயல் அலுவலர் ரவீந்திர மராதேவை போலீசார் கைது செய்ததற்கு இந்திய வங்கிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
டி எஸ்.கே.குழுமத்திற்கு 100 கோடி ரூபாய் கடன் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புனே பொருளாதார குற்றப்பிரிவுக்கு புகார் வந்தது.
இதையடுத்து பேங்க் ஆப் மகாராஷ்டிரா தலைமை செயல் அலுவலர் ரவீந்திர மராதே,முன்னால் மேலான் இயக்குனர் சுஷில் வினோத்,செயல் இயக்குனர் ராஜேந்திர குப்தா மற்றும் வங்கி அலுவலர்கள் இருவர் என மொத்தம் 5 பேர் புதன் கிழமை அன்று கைது செய்யப்பட்டனர்.
டி.எஸ் .குல்கர்னியுடன் சேர்ந்து பேங்க் ஆப் மகாராஷ்டிரா தலைமை செயல் அலுவலர் ரவீந்திர மராதே வாடிக்கையாளர்களை ஏமாற்றியதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கைதுக்கு இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைமை செயல் அலுவலர் கண்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.ரிசர்வ் வங்கியின் விதிமுறையை மீறப்படுவதாக கூறும் நிலையில் அந்த குற்றசாட்டில் தெளிவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.மகாராஷ்டிரா அரசின் முதலீட்டாளர் நலம் காக்கும் சட்டம் வங்கிகளுக்கு பொருந்தாது என்றும் 25 கோடி ரூபாய்க்கு மேலான கடன்களை சி.பி.ஐ.தான் விசாரிக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.