மம்தா பானர்ஜியின் சீனா பயணம் ரத்து..!
மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி 9 நாள் பயணமாக இன்று (22-ம் தேதி) சீனா செல்வதாக அறிவிக்கப்பட்டது. பீஜிங், ஷாங்காய் மற்றும் ஜினான் நகரங்களில் சென்று பார்வையிட இருப்பதாகவும், அதனை தொடர்ந்து அந்நாடு அதிகாரிகளுடம் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் கூறப்பட்டது.
மேற்கு வங்க மாநில வளர்ச்சி திட்டங்களுக்காக சீனாவுடன் இணைந்து செயல்படும் வகையில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களில், இந்த சந்திப்பினிடையே கையெழுத்திட உள்ளார் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மம்தா பானர்ஜியின் சீனா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மேற்கு வங்க மாநில நிதித்துறை மந்திரி அமித் மித்ரா தெரிவித்துள்ளார். சீனா அதிகாரிகள் உடன் நடைபெறுவதாக இருந்த சந்திப்பை அந்நாட்டு அரசு இதுவரையில் உறுதிப்படுவில்லை என்பதால் இந்த பயணம் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது