மத்திய வர்த்தக அமைச்சகத்திற்கு புதிய கட்டிடம் ..!
டெல்லி அக்பர் சாலையில் அமைக்கப்பட உள்ள வர்த்தக அமைச்சக கட்டிடமான வன்ஜியா பவன் அடிக்கல் நாட்டுதல் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அடிக்கல் நாட்டினார். அதன் பின் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய மோடி,
இந்தியா தாமதமாக வேலை செய்யும் பழக்கத்திலிருந்து விடுபட்டுள்ளது. தொழில்துறையில் ஜி.எஸ்.டி. பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்ட பின் 54 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வரி செலுத்த தொடங்கியுள்ளனர். இதனால் 1 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. புதிய தொழில்நுட்பங்கள் தொழில்முறைகளை எளிதாக்கி உள்ளன. இது ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சி அடைந்து வருகிறது.
உலக அளவில் இந்தியாவின் வர்த்தகத்தை 3.4 சதவீதம் உயர்த்த வேண்டும். அதற்காக எண்ணெய் போன்ற துறைகளில் பொருட்களை இறக்குமதி செய்வதை காட்டிலும், நம் நாட்டிலேயே உருவாக்குவதை ஊக்குவிக்க வேண்டும். கடந்த ஆண்டு ஜி.டி.பி. 7.7 சதவீதமாக இருந்தது. அதனை அதிகரிக்க வேண்டும்.
வன்ஜியா பவனின் கட்டிடப்பணிகள் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்பாகவே முடிவடைந்து விடும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.