வைகை ஆற்றில் 2 ஆண்டுக்கு பிறகு நீர் பெருக்கு…
வைகை ஆறு உற்பத்தியாகும் வருசநாடு பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மழை பெய்யவில்லை. இதனால், மூல வைகை ஆறு வறண்டு காணப்பட்டது. இந்த நிலையில், வருசநாடு, வெள்ளிமலை, உடங்கல் ஆகிய பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழைபெய்து வருகிறது.
இதனால், மூல வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது ஆகையால் நீர் பெருக்கு விரைவில் வைகை அணையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வைகை அணை தற்போது 52 அடியை தாண்டியுள்ள நிலையில், விரைவில் முழுக் கொள்ளவை எட்டும் நிலை உருவாகியுள்ளது.