மும்பையில் ஷாப்பிங் மாலில் நடந்த காட்சிகள் :பரபரப்பு..!

Default Image

நடிகை கஜோல் ,மும்பையில் ஷாப்பிங் மாலில் நடந்து சென்று கொண்டிருக்கும் போதுகால் இடறி விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

கடை திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மும்பையின் ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டிக்கு கஜோல் வந்திருந்தார். பாதுகாவலர் புடை சூழ வந்த அவர் திடீரென கால் இடறி விழுந்தார்.

இருப்பினும் தரையில் முழுமையாக விழும் முன்பே ஓரளவு அமர்ந்தபடி இருந்த கஜோலை அவருக்கு அருகில் இருந்தவர்கள் கைப்பிடித்து தூக்கிவிட்டனர்.

கீழே விழும் சமயம் கஜோல் பாய்ன்டட் ஹீல் எனப்படும் குச்சி போன்ற குதி கொண்ட காலணியை அணிந்திருந்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

இதேபோல் கடந்த 2015-ஆம் ஆண்டில் தில்வாலே ( Dilwale )படத்தின் டிரெயிலர் வெளியீட்டு நிகழ்ச்சியிலும் மேடையில் நின்றிருந்தபோதே கஜோல் கீழே விழ இருந்தார். அப்போது சக நடிகர் வருண் அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்து காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்