என்ஜிஓ பெண் பணியாளர்கள் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்..!

Default Image

ஜார்க்கண்டில் பழங்குடியின கிராமத்திற்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக சென்ற அரசு சாரா தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 5 பெண்கள், துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

ஜார்க்கண்டின் ஹன்ட்டி ((Khunti)) மாவட்டத்தில் புலம்பெயர்தல், ஆள்கடத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக அரசு-சாரா தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கொச்சாங் ((Kochang)) என்ற கிராமத்திற்கு சென்றுள்ளனர்.  அந்த பகுதிகளில் பழங்குடியின கிராம சபைகளுக்கே முழுஅதிகாரம் உள்ளது என்றும், வெளியாட்கள் யாரும் நுழையக் கூடாது என்றும் பதல்கர்கி ((Pathalgarhi)) என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் எச்சரித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அரசு சாரா தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்களை அவர்கள் சென்ற காரிலேயே, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர். ஆண்களை மட்டும் அடித்து உதைத்து, சிறுநீரை அருந்தச் செய்ததோடு காரிலேயே அடைத்துப்போட்டுள்ளனர்.

பின்னர் 5 பெண்களை வனப்பகுதிக்கு தூக்கிச் சென்று கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்து, அதை செல்போனில் படம்பிடித்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தங்கள் பகுதிக்குள் அனுமதியில்லாமல் அரசின் திட்டங்களை பரப்புவதற்கு நுழைய வேண்டாம் என வன்முறையில் ஈடுபட்டவர்கள் எச்சரித்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் புகாரில் கூறியுள்ளனர். இந்த அத்துமீறலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுபவர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், விசாரணைக்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருவதாகவும் ராஞ்சி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்