தமிழக உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் விசாரணை..!
தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ய அனுமதித்ததாகவும், இதற்காக கோடிக்கணக்கான பணம் லஞ்சம் பெற்றதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி நீதிபதிகள் அதிரடி உத்தரவிட்டனர்.
குட்கா வழக்கில் சிக்கிய மாதவ்ராவுக்கு உதவி செய்த அதிகாரிகள் யார், யார்? என்பது குறித்து தமிழக உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். குட்கா குடோனுக்கு அனுமதி வழங்கியது, ஆய்வு நடத்தியது யார்? என அதிகாரிகள் கேள்வி? எழுப்பியுள்ளனர்.
2016 ஆம் ஆண்டு ஜூலையில் ரூ.250 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக மாதவ்ராவ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.