விமானியின் அராஜகத்திற்கு கண்டனம்..!
ஏர் ஏசியா விமானத்தில் இருந்து பயணிகளை வெளியேற்றுவதற்காக ஏசியை உச்சத்தில் வைத்து கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் இருந்து பர்டோக்ரா சென்ற ஏர் ஏசியா விமானத்தில் பயணிகளுக்கும் விமானத்தில் இருந்த ஊழியர்களுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இதனால் விமானம் புறப்படாமல் பலமணி நேரம் தாமதமானது. உணவு, குடிநீர் கிடைக்காமல் பயணிகள் பரிதவித்தனர்.
பின்னர் பயணிகளை கீழே இறங்கும்படி விமானி கூறினார். ஆனால் பயணிகள் இறங்க மறுத்துவிட்ட நிலையில், அவர்களை பலவந்தமாக இறக்க, ஏசியை உச்சத்தில் வைத்து விமானி சென்று விட்டதாக கூறப்படுகிறது. குளிரில் நடுநடுங்கியபடி பயணிகள் வாந்தியெடுத்தனர். குழந்தைகள் அழுது கதறினர். இந்த காட்சிகள் வீடியோவாக பதிவாகி முகநூலின் வழியாகப் பரவியதைக் கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதற்காக சம்பிரதாயமாக ஏர் ஏசியா நிறுவனம் வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.