கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
கேரள உயர்நீதிமன்றம் , மலையாள பத்திரிகையின் அட்டையில் தாய்ப்பால் கொடுப்பது போன்ற படம் வெளியானதில் ஆபாசம் இல்லை என்று தீர்ப்பளித்துள்ளது.
கடந்த மார்ச் மாத கிரகலட்சுமி இதழின் அட்டையில், கிலு ஜோசப் என்ற 27 வயது மாடல், குழந்தைக்கு பால் கொடுக்கும் படம் வெளியாகி பாராட்டுகளையும் எதிர்ப்புகளையும் ஒரு சேர பெற்றது. இப்படம் ஆபாசமாக இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த படத்தில் ஆபாசம் இல்லை என்றும் ஆபாசமும் அழகும் காண்பவரின் கண்களில்தான் இருக்கிறது என்றும் நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். இந்த தீர்ப்பால் தாம் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் நல்ல நோக்கத்திற்காக தமது உடலின் ஒரு பகுதியை காட்டியதில் தமக்கு வருத்தம் இல்லை என்றும் கிலு ஜோசப் தெரிவித்துள்ளார்.