காஞ்சிபுரத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் கைது!
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 இளைஞர்களிடம் இருந்து காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் 25 செல்போன்கள் சிக்கியுள்ளன.
அப்பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது, இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர், முன்னுக்குபின் முரணாக பதிலளித்தனர். சந்தேகமடைந்து விசாரித்ததில் அவர்கள் ஒரகடம் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
3 பேரையும் கைது செய்த போலீசார், 25 செல்போன்கள், கத்தி மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.