20 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் சேலத்தில் பறிமுதல்!
சேலத்தில் வீடு மற்றும் குடோன்களின் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 20 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சேலம் அன்னதானப்பட்டி கே.எஸ் கார்டன் பகுதியில், ஏராளமான மாவு மில்கள், அரிசி குடோன்கள் உள்ளன. அவைகளில் சிலவற்றில் குட்கா பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டு சேலம் மாநகர் முழுக்க விநியோகம் செய்யப்படுவதாக காவல் ஆணையர் அலுவலகத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து ஆணையர் உத்தரவின் பேரில், அன்னதானப்பட்டி காவல்துறையினர் குறிப்பிட்ட பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த 2 குடோன்கள் மற்றும் வீடு ஒன்றில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 20 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் காவல்துறையினர் செய்தனர். இது தொடர்பாக மோகன், சுரேஷ் ஆகிய இருவரைக் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.