சந்தன மர கடத்தலை சென்னை பள்ளிக்கரணையில் தடுக்க போராடும் வனவேட்டை தடுப்பு காவலர்!
வனத்துறைக்கு சொந்தமான காப்பு காடுகள் சென்னை பள்ளிக்கரணையில் உள்ளன.. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் உட்பட நன்மங்கலம், கோவிலம்பாக்கம், சந்தோசபுரம், அஸ்தினாபுரம், நெமிலிச்சேரி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய வனப்பகுதி வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகிறது…
இதில் கடந்த 2003 முதல் 2012ஆம் ஆண்டு வரை வன பாதுகாவலராக முருகதாஸ் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்… அப்போது வனப்பகுதியை ஒட்டியுள்ள நன்மங்கலம், கோவிலம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட ஏரி பகுதிகளில் இயற்கையாகவும், வனத்துறையாலும் நடப்பட்டு வளர்ந்த 450 க்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் இருந்துள்ளன…
கடந்த 2010ஆம் ஆண்டு அவற்றை சட்ட விரோதமாக வெட்டி கடத்த சிலர் முற்பட்டுள்ளனர்… அப்போது காவல் துறை உதவியுடன் கடத்தலில் ஈடுபட்டவர்களை பிடித்து சிறையில் அடைத்துள்ளார். அதன்பின் வனப் பாதுகாவலரான முருகதாஸ், வேட்டை பாதுகாப்பு காவலராக மாற்றப்பட்டுள்ளார்…
இந்நிலையில், நன்மங்கலம் ஏரி பகுதியில் எஞ்சியுள்ள சந்தன மரங்கள், சட்டவிரோதமாக வெட்டப்பட்டு கடத்தப்பட்டுவதாக வனக்காவலர் முருகதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்…. இதுபற்றி 2012ஆம் ஆண்டு முதல், முதலமைச்சரின் தனிப்பிரிவிலும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடமும், பசுமை தீர்ப்பாயத்திலும் பலமுறை புகார் அளித்தும் பயனில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.