இன்றுதான் மார்ட்டின் லூதர் கிங்கிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது…!
வரலாற்றில் இன்று அக்டோபர் 14, 1964 அமெரிக்காவில் கறுப்பு இனத்தவர்களின் சம உரிமைக்காகப் பாடுபட்ட மார்ட்டின் லூதர் கிங்கிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இப்பரிசினை அவர் பெறும்போது அவருக்கு வயது 36 மட்டுமே. நோபல் பரிசினை மிகவும் குறைந்த வயதில் பெற்றவர் மார்ட்டின் லூதர் கிங். அதனைத் தொடர்ந்து அமெரிக்க அரசாங்கம் 1965-ஆம் ஆண்டு கருப்பினத்தவர்களுக்கு ஓட்டுரிமை அளித்தது கருப்பினத்தவர்களும், வெள்ளையினத்தவர்களும் சமம் என்பதைப் பிரகடணப்படுத்தும் மனித உரிமை சட்டத்தையும் அமெரிக்கா நிறைவேற்றியது