பலத்த காற்று காரணமாக பாம்பன் பாலம் பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிப்பு
மூன்றாவது நாளாக ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பன் பால பகுதியில் பலத்த காற்று வீசியதால், ரயில் போக்குவரத்தில் மட்டும் தேக்க நிலை காணப்பட்டது.
பாம்பன் பகுதியில் 55 கிலோ மீட்டர் முதல் 63 கிலோ மீட்டர் வரையில், மூன்றாவது நாளாக பலத்த காற்று வீசியது. இதனால் பாம்பன் ரயில் பாலத்தில், மூன்றாவது நாளாக பகலில் ரயில்கள் இயக்கப்படவில்லை.
மாலையில் காற்று ஓய்ந்த பின்னரே, இரவு வாக்கில், சென்னை, கோயம்புத்தூர், வாரணாசி செல்லும் விரைவு ரயில்கள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் இயக்கப்பட்டன. பலத்த காற்று காரணமாக, பல மணி நேரம் தாமதமாக ரயில்கள் இயக்கப்பட்டதால், ரயில் பயணிகளும், ஆன்மீக சுற்றுலா வந்தவர்களும், கடும் அவதிக்கு ஆளாகினர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.